» சினிமா » செய்திகள்

சிம்புவின் மாநாடு பூஜையுடன் தொடங்கியது!!

புதன் 19, பிப்ரவரி 2020 4:21:08 PM (IST)வெங்கட்பிரபு இயக்கத்தில்  சிம்பு கதாநாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவருடன் ஜோடி சேர்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் தொடங்கப்பட்டு பின் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒரு வழியாக இன்று(பிப்ரவரி 19) காலை சென்னை தியாகராய நகரில் மாநாடு படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.

சிம்பு, நாயகி கல்யாணி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பாரதிராஜா, சீமான், தயாரிப்பாளர் அன்புச்செழியன் மற்றும் பலர் படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர். காலை ஒன்பது மணிக்கு பூஜை அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு என்று சிம்புவுக்குத் தகவல் கூறப்பட்டிருந்ததாம். ஆனால் காலை 8:15 மணிக்கே படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சிம்பு. இதனால் மிக உற்சாகமாக முதல்நாள் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் மாநாடு படக்குழுவினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory