» சினிமா » செய்திகள்

டிரம்ப் விருந்துக்கு அழைப்பு : ஜனாதிபக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி!!

புதன் 26, பிப்ரவரி 2020 5:29:51 PM (IST)

டிரம்ப் விருந்தில் பங்கேற்க அன்பான அழைப்பு விடுத்த ஜனாதிபதிக்கு ஏ.ஆர். ரகுமான் நன்றி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிலையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருக்கு நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சில முதல்-மந்திரிகளும், தொழிலதிபர்களும் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டிரம்பிற்கு ஏ.ஆர். ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமான் டுவிட்டர் பதிவில், ராஷ்டிரபதி பவனில் எங்கள் ஹீரோக்களில் ஒருவர் (அப்துல் கலாம்) இந்த ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காக ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு மிக்க நன்றி என ஏ.ஆர். ரகுமான் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory