» சினிமா » செய்திகள்

மனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை

திங்கள் 30, மார்ச் 2020 11:55:38 AM (IST)

ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என நடிகா் ரிஷிகபூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி, பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் பழம்பெரும் இந்தி நடிகரான ரிஷி கபூர் மதுபான கடைகளை திறந்து வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-என்னை தவறாக நினைக்க வேண்டாம். உரிமம் வைத்துள்ள அனைத்து மதுபான கடைகளும், மாலை வேளையில் இயங்க, அரசு அனுமதி வழங்கவேண்டும் என நான் நினைக்கிறேன். மனஅழுத்தம், நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் வீடுகளில் முடங்கியிருக்கும் மனிதர்கள், போலீசார், டாக்டர்கள், பொதுமக்களுக்கும் சிறிது இளைப்பாறுதல் தேவை. 

மனஅழுத்தத்துடன், விரக்தியும் சேர்ந்துவிட கூடாது. இப்போது, மதுபானங்கள், நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரிஷி கபூரின் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  மேலும், இது சாத்தியமில்லாத ஒன்று என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory