» சினிமா » செய்திகள்

கரோனா தடுப்பு பணிகள்: அஜித்குமார் ரூ.1¼ கோடி நிதியுதவி

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 5:32:19 PM (IST)

கரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல் அமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு (பெப்சி அமைப்பு) ரூ.25 லட்சம் என ரூ.1.25 கோடியை நடிகர் அஜித்குமார் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பு, ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சமும் நடிகை நயன்தாரா ரூ.20 லட்சமும் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் பார்த்திபன் 25 கிலோ எடை கொண்ட 250 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் மனோபாலா 10 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூடை அரிசி வழங்கி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory