» சினிமா » செய்திகள்

விஜய் எப்படி ஒத்துக்கிட்டார்: மாஸ்டர் படத்தை பார்த்து நடிகை அதிர்ச்சி!!

புதன் 6, மே 2020 4:27:30 PM (IST)

மாஸ்டர் படத்தை பார்த்த நடிகை ஒருவர், விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா ரவி. இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங் கலைஞரான ரவீனா நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் டப்பிங் பேசியபோது அதில் விஜய்யின் கதாபாத்திரத்தை கண்டு ஷாக் ஆனதாக கூறியுள்ளார். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என தோன்றியதாக ரவீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory