» சினிமா » செய்திகள்

ரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி!!

செவ்வாய் 19, மே 2020 12:32:09 PM (IST)

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கிற்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் தாக்கரே படத்தில் பால்தாக்கரே வேடத்திலும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லானாகவும் நடித்து உள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் முதல் மனைவி ஷீபா. இவருடனான நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. 

இதையடுத்து அவர் இரண்டாவதாக ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நவாசுதீன் சித்திக்- ஆலியா தம்பதியின் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொகை கேட்டு ஆலியா வக்கீல் அபய் சஹாய் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் விரைவு தபால் வசதி கிடைக்காததால் அவருக்கு இந்த விவாகரத்து நோட்டீஸ் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நோட்டீஸ் தொடர்பாக நடிகர் நவாசுதீன் சித்திக் இன்னும் பதிலளிக்கவில்லை என்று வக்கீல் அபய் சஹாய் கூறினார். இதுபற்றி ஆலியா கூறும்போது, விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே கடுமையானவை" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory