» சினிமா » செய்திகள்

கரோனா ஒழிந்தால்தான் படப்பிடிப்பு: ரஜினி, அஜித் வழியில் சூர்யா முடிவு!!

சனி 27, ஜூன் 2020 3:37:17 PM (IST)தமிழகத்தில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்தால்தான் படப்பிடிப்பு என்று ரஜினி மற்றும் அஜித் எடுத்த முடிவை தற்போது சூர்யாவும் பின்பற்றியுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த’, அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னரே ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினியும், இதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் தன்னுடைய அடுத்த திரைப்படமான ’அருவா’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ராஜாJun 27, 2020 - 03:41:38 PM | Posted IP 162.1*****

good decision

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory