» சினிமா » செய்திகள்

ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

சனி 4, ஜூலை 2020 10:46:15 AM (IST)இந்திய-சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு சென்ற அவர் அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார். அதில்,

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’

என்ற குரளை பிரதமர் மோடி கூறினார். பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார். அவரது இந்த செயல் நாடு முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த குரலின் பொருள் "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.

இதனையடுத்து, லடாக்கில் ராணுவ வீரர்களிடம்  திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். படை வீரர்களுக்கான உரையில், படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி என்று குறிப்பிட்டுள்ள அவர்,

‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’

என்ற இன்னொரு குறளையும் அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம் என தெரிவித்துள்ளார். பசியும், நோயும், பகையும் இல்லாத  நாடுதான் சிறந்த நாடு என அந்த குறளுக்கு பொருள் குறிப்பிடப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory