» சினிமா » செய்திகள்

சினிமாவிலிருந்து வெப் தொடருக்கு மாறிய வடிவேல்

வெள்ளி 31, ஜூலை 2020 5:13:00 PM (IST)

சுராஜ் இயக்கும் புதிய வெப் தொடரில் நகைச்சுவை நடிகர் வடிவேல்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கரோனாவால் தடைபட்டுள்ளது. இந்நிலையில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

படப்பிடிப்பை கரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில் வடிவேல் திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் வற்புறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்த மாதிரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யராஜ், பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, சீதா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory