» சினிமா » செய்திகள்

கரோனாவிலிருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்

சனி 8, ஆகஸ்ட் 2020 3:50:13 PM (IST)

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.

இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: இன்று மதியம், எனக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. கரோனாவை என்னால் வெல்ல முடியும் என்று சொன்னேன் அல்லவா! எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory