» சினிமா » செய்திகள்
திரைப்பயணத்தில் 45 ஆண்டுகள்: ரஜினிகாந்த் உருக்கம்
திங்கள் 10, ஆகஸ்ட் 2020 12:20:26 PM (IST)
திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள ஒரு மனிதர், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், மக்கள் சேவையாலும், ரசிகர்கள் மனங்களில் நிறைந்து உள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த அவர் அண்ணாத்தவாக அசத்தி வருகிறார்.
ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தற்போது தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து வெளியிடுகின்றனர். இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
— Rajinikanth (@rajinikanth) August 9, 2020
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)
