» சினிமா » செய்திகள்

ரசிகர் தற்கொலை: குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலமாக விஜய் ஆறுதல்

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 4:36:23 PM (IST)

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலா, விஜய்யின் தீவிர ரசிகர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன், தலைவனையும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். 

பாலாவின் மரணத்துக்கு நடிகர்கள் ஷாந்தனு, சஞ்சீவ் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள்.  இந்நிலையில் பாலாவின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய். கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் மூலமாக பாலாவின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory