» சினிமா » செய்திகள்

தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள்: யோகி பாபு வேதனை!!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 4:47:27 PM (IST)

தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்..

சமீபத்தில் ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் தெளலத். ஷக்தி சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. தெளலத் போஸ்டர் யோகி பாபு மட்டும் தனியாக இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டது படக்குழு. இது தொடர்பாக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார் யோகி பாபு. தற்போது தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் யோகி பாபு கூறியிருப்பதாவது: "சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள்.

இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள். "அண்ணா, முழுமையாக இருப்பீர்கள் என நம்பி திரையரங்கிற்குச் சென்றோம். ஆனால், 2 - 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள். என்ன அண்ணா இது" என்று சில ரசிகர்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்டார்கள். இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே தெளலத் என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.


என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்" இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory