» சினிமா » செய்திகள்

கரோனா பாதிப்பில் மீண்டு வருவேன் : நிக்கி கல்ராணி

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 4:59:57 PM (IST)

கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விரைவில்  மீண்டு வருவேன் என  நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். 

கரோனா தொற்றில் பிரபல நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா உள்பட பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

இவர் சென்னை எழும்பூரில் வசிக்கிறார். தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா,கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2, கீ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து டுவிட்டரில் நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது: "எனக்கு கடந்த வாரம் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், சுவை இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக லேசான பாதிப்பே இருந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று இப்போது தேறி வருகிறேன். எனக்கு வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் இல்லை என்பதால் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன். இந்த காலகட்டம் அனைவரையும் பயமுறுத்தக்கூடியது.

எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதும், மற்றவர்கள் பாதுகாப்பை கவனிப்பதும் முக்கியம். எல்லோரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.”இவ்வாறு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory