» சினிமா » செய்திகள்

திரையுலகில் 61 ஆண்டுகள்: கமல்ஹாசனுக்கு பிரபலங்கள் வாழ்த்து

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 5:16:34 PM (IST)

திரையுலகில் 61 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கமல்ஹாசனுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார். 

கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் திரையுல பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை வைத்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள். உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், "உலக நாயகனின் சாதனைகள் அளப்பரியது. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். நடிகை பார்வதி வெளியிட்டுள்ள பதிவில், "உலக நாயகனின் 61 ஆண்டு சினிமா சாதனையை கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார். இயக்குனர்கள் கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ், நடிகர் மனோஜ், பாடலாசிரியர் விவேக் உள்பட பலர் வாழ்த்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory