» சினிமா » செய்திகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது : எஸ்பிபி. சரண்

திங்கள் 17, ஆகஸ்ட் 2020 12:35:05 PM (IST)

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது எஸ்பிபி. சரண் தெரிவித்துள்ளார். 

கரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ் பாலசுப்ரமணியத்திற்கு நினைவு வந்திருப்பதாகவும், மருத்துவர்களிடம் கையசைத்தார் என்றும் அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory