» சினிமா » செய்திகள்
நீங்களும் தோனி மாதிரிதான்: சிவகார்த்திகேயனுக்கு சீனு ராமசாமி புகழாரம்!!
திங்கள் 17, ஆகஸ்ட் 2020 12:41:40 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். தோனிக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன், "எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தோனி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவன் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாள்வீர்கள். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதிவை குறிப்பிட்டு இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: "சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை நீங்களும் பலரை மகிழ்வித்து வழிகாட்டியாக இருந்து உள்ளீர்கள். நீங்களும் தோனி மாதிரி நண்பர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)
