» சினிமா » செய்திகள்

விரைவில் பிக்பாஸ் 4? புதிய தோற்றத்தில் கமல்!!

வியாழன் 20, ஆகஸ்ட் 2020 11:56:54 AM (IST)விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அடுத்து பிக்பாஸ் 4-வது சீசனையும் தொகுத்து வழங்க தயாராகி வருகிறார். இதில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தோற்றத்தில் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி, மோதல், கவர்ச்சி உடைகள் அணிதல் போன்ற சர்ச்சைகளால் சில அமைப்புகள் எதிர்ப்பு கிளப்பி தடை செய்யும்படியும் வற்புறுத்தின. 4-வது சீசனுக்கு நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது. இந்த சீசனிலும் பரபரப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory