» சினிமா » செய்திகள்

வெள்ள நிவாரண பணிகளுக்கு அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி : அசாம் முதல்வர் நன்றி!!

வியாழன் 20, ஆகஸ்ட் 2020 12:03:32 PM (IST)அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். 

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 112 பேர், நிலச்சரிவில் 26 பேர் என மொத்தம் 138 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு முதல்வர் சர்வானந்த சோனோவால் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் "அக் ஷய் குமார் எப்போதும் அசாம் மக்களின் உண்மையான நண்பராக இருந்து வருகிறார். அவரது உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அசாமின் உண்மையான நண்பராக, உலக அரங்கில் அவரது புகழ் பரவ, கடவுள் அவருக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் பொழிவார்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory