» சினிமா » செய்திகள்

மத்திய அரசுக்கு நன்றி... தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்குகிறேன்: விஷால்

திங்கள் 24, ஆகஸ்ட் 2020 5:05:24 PM (IST)

படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுக்கவே ரத்து செய்யப்பட்டன. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கிலிருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதில் நேற்று (ஆகஸ்ட் 23) படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளது. இதனால், விரைவில் தமிழக அரசும் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே படப்பிடிப்புக்கான அனுமதி தொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. பாதுகாப்பான சூழலுக்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்துத் திரைப்படப் படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறேன். எப்போது திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்குகிறேன்"இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தற்போது எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இன்னும் 7 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory