» சினிமா » செய்திகள்

எஸ்பிபி-க்கு கரோனா பாசிட்டிவா, நெகடிவ்வா? மகன் எஸ்பிபி சரண் புதிய விளக்கம்

திங்கள் 24, ஆகஸ்ட் 2020 5:08:52 PM (IST)

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கரோனா நெகட்டிவ் என்று வெளியான தகவல்களை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ர மணியம், சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எஸ்.பி.பி.,க்கு இன்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில்,நெகட்டிவ் என முடிவு வந்ததாக சில தமிழ் மீடியாக்களில் செய்தி வெளியானது. சமூக வலைதளங்களிலும் பரவியது.

இதனையடுத்து எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம். வழக்கமாக மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனைக்கு பிறகே, எனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலை வெளியிடுவேன். ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று காலையிலேயே வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் முதலில் எனக்கு மட்டும் தான் வரும். அதன் பிறகே நான் மீடியாவிற்கு தகவல் தெரிவிப்பேன்.

ஆனால், எனது தந்தைக்கு கரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சில மீடியாக்களில் வதந்தி பரவி வருகிறது. கரோனா பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதை தாண்டி, எனது தந்தையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதன் மூலம் அவரது நுரையீரலை குணப்படுத்தும் என நம்புகிறோம். எனவே வதந்தி பரப்புவதை நிறுத்துமாறு கேட்டு கொள்கிறேன். டாக்டருடன் ஆலோசனை நடத்திவிட்டு, எனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory