» சினிமா » செய்திகள்

நடிகர் ராம் சரணுக்கு கரோனா தொற்று உறுதி

செவ்வாய் 29, டிசம்பர் 2020 12:34:06 PM (IST)

நடிகர் சிரஞ்சீயின் மகனும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகருமான ராம் சரண், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வரை ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராம் சரண் கலந்து கொண்டார். கடந்த 25ஆம் தேதி கிறிற்துமஸ் தினத்தன்று ஒரு விருந்து நிகழ்ச்சியை ராம் சரண் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இந்நிலையில் ராம்சரண் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து உறுதியுடன் வெளியே வருவேன் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களில் என்னோட இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை குறித்த தகவல்களை விரைவில் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராம்சரண் விரைவில் குணமடைய ரசிகர்களும், பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory