» சினிமா » செய்திகள்
பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத்தின் தந்தை காலமானார்
செவ்வாய் 29, டிசம்பர் 2020 3:29:01 PM (IST)
பிக் பாஸ் புகழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி. சம்பத் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 62.

தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டகிராமில் அனிதா சம்பத் தெரிவித்ததாவது:என் தந்தை உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகத் தனிமைப்படுத்துவதற்கு முன்பு அவரைக் கடைசியாகச் சந்தித்தேன். பிக் பாஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது அவர் சீரடிக்குச் சென்றிருந்தார். அவருடைய போனில் தொடர்பு கொள்ள முடியாததால் நான் பேசவும் இல்லை. இன்று காலை 8 மணிக்கு இந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சீரடியிலிருந்து திரும்பும்போது ஆந்திராவின் அருகே ரயிலில் உயிரிழந்துள்ளார்.
அப்பா நீ வீட்டுக்கு நடந்து வர வேண்டும். உங்களிடம் நிறைய பேச வேண்டும். உங்கள் குரல் கேட்டு 100 நாள்கள் ஆகிவிட்டன. வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்த இரு தினங்களாக அவரால் சாப்பிட முடியாமல் போனது. மாரடைப்பால் உயிரிழக்கவில்லை.தெரிந்திருந்தால் முன்பே (பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து) வெளியேறி அப்பாவுடன் சிறிது நாள் இருந்திருப்பேன். என் அப்பா இனி திரும்ப வரமாட்டார். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் காப்பாற்றப்பட்டிருந்தால் என்னால் கடைசியில் கூட அப்பாவைப் பார்த்திருக்க முடியாது. வாழ்க்கை ஊகிக்க முடியாதது என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி
திங்கள் 4, ஜனவரி 2021 5:04:09 PM (IST)

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்
திங்கள் 4, ஜனவரி 2021 12:35:45 PM (IST)
