» சினிமா » செய்திகள்

வேலுநாச்சியார் பாத்திரத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா விளக்கம்

புதன் 30, டிசம்பர் 2020 12:19:47 PM (IST)

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவில்லை வெளியான என நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனை நயன்தாரா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரது தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நயன்தாரா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நயன்தாரா மறுத்துள்ளார். இது ஆதாரமற்ற வதந்தியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory