» சினிமா » செய்திகள்
இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.மாஸ்டர் படம் தொடர்பாக இதுவரை 7 ட்ரெயிலர்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மாஸ்டர் குழுவினரும் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களும் மாஸ்டர் பொங்கல் திருவிழா என ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் லீக்கான காட்சிகளை நீக்கும் பணியில் மாஸ்டர் படக் குழு தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது, மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை ஃபார்வர்டு செய்யவோ ஷேர் செய்யவோ வேண்டாம். மேலும் கசிந்த காட்சிகளை பார்த்தால் report@blockxpiracy.com என்ற முகவரியில் எங்களுக்கு பகிருங்கள் என பதிவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி
திங்கள் 4, ஜனவரி 2021 5:04:09 PM (IST)

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்
திங்கள் 4, ஜனவரி 2021 12:35:45 PM (IST)

சித்ரா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை: முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்றோர் மனு!
புதன் 30, டிசம்பர் 2020 4:39:14 PM (IST)
