» சினிமா » செய்திகள்
சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா சரத்குமார் விலகல்!!
வெள்ளி 12, பிப்ரவரி 2021 11:54:45 AM (IST)

சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த சித்தி தொடர், 90களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரின் 2-ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ஜெயலட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தத் தொடரை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனமே தயாரித்து வருகிறது. தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "மகிழ்ச்சியும் கொஞ்சம் சோகமும் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன். சித்தி 2 மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது சிறப்பான வருடங்களையும், கடின உழைப்பையும் சன் டிவியில் தந்திருக்கிறேன். அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், உடன் நடித்தவர்களிடமும் சோகத்துடன் விடை பெறுகிறேன். ஆனால், நிகழ்ச்சி தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள்.
எனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு என் அன்பு. நிபந்தனையில்லாத அன்புக்கும், விஸ்வாசத்துக்கும் நன்றி. தொடர்ந்து சித்தி 2வைப் பாருங்கள். எனது சிறந்த வெளிப்பாடு இனிமேல் தான் வரவுள்ளது". இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கணவர் சரத்குமாருடன் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால் அவர் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)

மக்கள்Feb 14, 2021 - 07:52:50 PM | Posted IP 49.37*****