» சினிமா » செய்திகள்
இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்பராஜ் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

அப்படியென்றால் இந்தியன் 2-வின் நிலை ? ஷங்கர் - ராம்சரண் கூட்டணி துவங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். ஏனெனில், ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடியவே 1 மாதம் மேலாகும். அதைத் தொடர்ந்து ஒரு மாதம் பட புரோமோஷனை முடித்துவிட்டு தான், ஷங்கர் படத்துக்கு வருகிறார் ராம்சரண். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்தியன் 2 படத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர்.
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் வருவதால், களத்தில் மய்யமாக பணியாற்றிவரும் கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் இந்தியன் 2வில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நடுவே, சித்தார்த், காஜல் அகர்வாலுக்கானக் காட்சிகளை முடிக்க இருக்காராம் ஷங்கர். இந்நிலையில், புதிதாக ஒரு தகவல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது. சமீபகாலமாக இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்பராஜை காண முடிகிறது. என்னவென்று விசாரித்தால் ராம்சரண் - ஷங்கர் படத்தில் இணைந்திருக்கிறாராம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ராம் சரண் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதும் பணிகளுக்காக ஷங்கருடன் இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்குவதில் கில்லி ஷங்கர். ஆனால், கதை, வசனத்தில் ஷங்கருக்கு பெரும் பலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா. அவரில்லாமல் ஷங்கர் இயக்கிய படங்கள் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இந்நிலையில், அந்த பணிக்காக கார்த்திக் சுப்பராஜைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியன் 2 பட பணிகளில் ஷங்கர் இருந்தாலும், ராம் சரண் பட வேலைகளை கார்த்திக் சுப்பராஜ் துவங்கிவிட்டார் என்றே சொல்கிறார்கள். ஷங்கருடன் கார்த்திக் சுப்பராஜ் எனும் காம்பினேஷனே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கரோனா வந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது - நடிகர் விவேக்
வியாழன் 15, ஏப்ரல் 2021 5:15:36 PM (IST)

நடத்தை சந்தேகத்தில் அடித்து துன்புறுத்துகிறார்: சப்-இன்ஸ்பெக்டர் மீது நடிகை ராதா புகார்!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 5:13:13 PM (IST)

அந்நியன் இந்தி ரீமேக் விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்
வியாழன் 15, ஏப்ரல் 2021 4:45:52 PM (IST)

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் கலவரம்: கர்ணன் படத் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:41:42 PM (IST)

நடிகர் செந்திலுக்கு கரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:45:06 AM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)
