» சினிமா » செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

புதன் 31, மார்ச் 2021 3:20:28 PM (IST)சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு  விஜய் நடிக்கும் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்று (மார்ச் 31) சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. தளபதி 65 படப்பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. 

சென்னை, ஹைதராபாத், ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது. தளபதி 65 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory