» சினிமா » செய்திகள்

பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண விழா : முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

செவ்வாய் 6, ஜூலை 2021 5:19:20 PM (IST)நட்சத்திரத் தம்பதி பொன்வண்ணன் - சரண்யா மகளின் திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!

நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யாவுக்கு ப்ரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் ப்ரியதர்ஷினி, விக்னேஷை நேற்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். மரக்கன்று பசுமைக்கூடையைப் பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினார். திருமணப் புகைப்படங்களைப் நடிகை தேவதர்ஷினி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory