» சினிமா » செய்திகள்
சிவா, யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா ரீமேக்!
வியாழன் 8, ஜூலை 2021 3:21:55 PM (IST)
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற நகைச்சுவைப் படங்களில் ஒன்றான காசேதான் கடவுளடா மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது.

மிர்ச்சி சிவா, யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் இந்த ரீமேக்கில் நடிக்கின்றனர். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகி பாபுவும், மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசியும் நடிக்கவிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ரீமேக் குறித்துப் பேசியிருக்கும் ஆர்.கண்ணன், " காசேதான் கடவுளடா திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு. எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியைப் பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளோம். அற்புதத் திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 அன்று தொடங்கி, ஒரே கட்டமாக 35 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனனும், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.ஆர்.கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் : இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
திங்கள் 14, ஜூலை 2025 10:28:48 AM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)
