» சினிமா » செய்திகள்

பா.இரஞ்சித் - ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ஜூலை 22-ல் ஓடிடியில் ரிலீஸ்!

வியாழன் 8, ஜூலை 2021 4:29:57 PM (IST)பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படித்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் எப்போது மீண்டும் இயங்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலை மற்றும் கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory