» சினிமா » செய்திகள்

மருத்துவப் பரிசோதனை நிறைவு: சென்னை திரும்பினார் ரஜினி!

வெள்ளி 9, ஜூலை 2021 12:43:06 PM (IST)

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகா் ரஜினிகாந்த் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை திரும்பினார்.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குச் சில வாரங்களுக்கு முன்பு சென்றாா் ரஜினி. அவருடன் குடும்பத்தினரும் சென்றனா். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வா்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியானது.

பிறகு, அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகா்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி. இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ரசிகர்கள் பலரும் அவரை வரவேற்றனர். மருத்துவப் பரிசோதனை நல்லபடையாக முடிந்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் அவா் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாவதை சன் பிக்சா்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory