» சினிமா » செய்திகள்

லோகேஷ் இயக்கத்தில் கமல் - விஜய் சேதுபதி இணையும் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சனி 10, ஜூலை 2021 5:12:50 PM (IST)லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் - விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

முன்னதாக, படத்தின் பெயரை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது. சமூக வலைதளத்தில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள்.

கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் இசையமைப்பாளராக அனிருத், சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களாக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பதை உறுதி செய்துள்ளது படக்குழு. விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல், "வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory