» சினிமா » செய்திகள்

மணி ரத்னம் படத்தில் இலவசமாகப் பணியாற்றிய பிரபலங்கள்!!

சனி 10, ஜூலை 2021 5:23:17 PM (IST)மணி ரத்னம் தயாரித்துள்ள நவரசா படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்கள் இலவசமாகப் பணியாற்றியுள்ளனர். 

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். 

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ. 10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் டீசரும் வெளியாகியுள்ளது. நவரசா படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் உள்பட அனைவரும் இதற்காக ஊதியம் பெறவில்லை. திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காக அனைவரும் முன்வந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். 

நவரசா படத்தில் உள்ள ஒன்பது கதைகள் ஒவ்வொன்றும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடியவை. எனவே ஒட்டுமொத்த படமும் 5 மணி நேரம் ஓடும் என்பதால் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. முதலில் ரூ. 10 கோடி வருமானம் கிடைக்கும் எனத் திட்டமிட்டாலும் தற்போது குறைந்தபட்சமாக ரூ. 12 கோடியும் அதிகபட்சமாக ரூ. 15 கோடி வரைக்கும் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் அனைத்துத் தொகையையும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்க மணி ரத்னமும் ஜெயேந்திராவும் முடிவெடுத்துள்ளார்கள். பூமிகா அறக்கட்டளை மூலமாக இந்தத் தொகை திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory