» சினிமா » செய்திகள்

அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் புதிய சாதனை

திங்கள் 12, ஜூலை 2021 12:21:31 PM (IST)அஜித்தின் வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணிநேரத்தில் முறியடித்துள்ளது. இதுவரை வலிமை மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory