» சினிமா » செய்திகள்
கமல், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படப்பிடிப்பு தொடக்கம்
வெள்ளி 16, ஜூலை 2021 12:32:21 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
முன்னதாக, படத்தின் பெயரை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது. இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். ஃபகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

