» சினிமா » செய்திகள்
பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி காலமானார்: மூன்று முறை தேசிய விருது பெற்றவர்!
வெள்ளி 16, ஜூலை 2021 3:52:55 PM (IST)
மூன்று முறை தேசிய விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது 76.
பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கம் வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கும் முன்பு 2018ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்தபோது கீழே விழுந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது. சுரேகா சிக்ரி, 1978ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான கிசா குர்சி கா என்ற் படத்தில் அறிமுகமானார். அத்துடன், ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிளும், தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். 1988ம் ஆண்டு வெளியான தமஸ், மற்றும் 1995ம் ஆண்டு வெளியான மம்மூ என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
2008ம் ஆண்டில் பாலிகா வாது என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றார். இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989ல் சங்கீத நாடக அகாடமி விருது வென்றார். மேலும், 64 வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதிற்கு சுரேகா சிக்ரி பரிந்துரைக்கப்பட்டார். சுரேகா சிக்ரி மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

