» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் வெளியீடு

செவ்வாய் 20, ஜூலை 2021 11:51:23 AM (IST)மணி ரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை கரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தினர். கரோனா 2-வது அலையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு நேற்று மீண்டும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் ஐஸ்வர்யாராய் பங்கேற்று நடித்தார். ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், விக்ரம் பிரபு, அஷ்வின், விஜய் ஜேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், ரியாஷ்கான், மோகன்ராம், அர்ஜுன் சிதம்பரம், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபலா, ஜெயசித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory