» சினிமா » செய்திகள்
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
செவ்வாய் 20, ஜூலை 2021 4:59:12 PM (IST)
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கப்பட்டு உள்ளது. அவரது பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு உள்ளது.
நடிகையும், பா.ஜ.க நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தார் .தற்போது @khushsundar என்ற அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குஷ்புவை டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்.அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.கவுக்கு வந்த குஷ்பு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் தனக்கு பா.ஜ.கவில் ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும் என நம்பி இருந்தார். சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டு பா.ஜ.க தலைவர்களை சந்தித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 7ந்தேதியும் குஷ்புவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிட தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம் பைசன் : படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

பைசன் படம் சூப்பர்... மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினி!
புதன் 22, அக்டோபர் 2025 12:49:56 PM (IST)

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)

