» சினிமா » செய்திகள்
தனுஷின் மாறன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
புதன் 28, ஜூலை 2021 12:09:23 PM (IST)
நடிகர் தனுஷின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மாறன் என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை 'துருவங்கள் பதினாறு, மாபியாபோன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இதை முடித்துவிட்டு தனுஷ் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது