» சினிமா » செய்திகள்

விஜய் - தோனி திடீர் சந்திப்பு : வைரலாகும் படங்கள்

வியாழன் 12, ஆகஸ்ட் 2021 3:47:05 PM (IST)



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

சென்னையில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

கரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகள் அடுத்த மாதம் அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிற வீரர்களுடன் இன்னும் இரண்டு நாள்களில் துபை செல்வதற்காக கேப்டன் தோனி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory