» சினிமா » செய்திகள்

பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்

சனி 21, ஆகஸ்ட் 2021 11:27:49 AM (IST)

பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு  திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் சேரன் பாண்டியன், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சித்ரா. அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தின் மூலம் பிரபலமானார். 

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த சித்ரா, இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சித்ராவின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory