» சினிமா » செய்திகள்
குருவாயூர் கோயில் வாசல் வரை மோகன்லால் காரை அனுமதித்த கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட்
திங்கள் 13, செப்டம்பர் 2021 11:03:16 AM (IST)
தடையை மீறி குருவாயூர் கோயில் வாசல் வரை பிரபல நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த, கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைசன் படம் சூப்பர்... மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினி!
புதன் 22, அக்டோபர் 2025 12:49:56 PM (IST)

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி மற்றும் திரையுலகினர் இரங்கல்
புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

