» சினிமா » செய்திகள்

ஆசிட் வீசி கொல்ல முயற்சி? மாஜி காதலர் மீது நடிகை புகார்

திங்கள் 13, செப்டம்பர் 2021 5:18:03 PM (IST)

தனது முகத்தில் திராவகம் வீச முயன்றதாக முன்னாள் காதலர் மீது நடிகை அக்‌ஷரா சிங் புகார் அளித்துள்ளார்.

இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அக்‌ஷரா சிங் தனது முன்னாள் காதலர் ஆள் வைத்து திராவகம் வீச முயன்றதாகவும் அதில் இருந்து தப்பியதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒருவனை காதலித்தேன். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவனை பிரிய முடிவு செய்தேன். இதனால் அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்தான். என்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் சதி செய்தான். ஒரு கட்டத்தில் எனது முகத்தில் திராவகம் வீசி கொலை செய்வதற்காக சிலரை அனுப்பி வைத்தான். அவர்களிடம் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது'' என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory