» சினிமா » செய்திகள்

கனிமொழி திறந்து வைத்த பஸ் ஸ்டாப்பிற்கு ரூ.1.54 கோடியா...? காயத்ரி ரகுராம் கேள்வி!

புதன் 15, செப்டம்பர் 2021 5:11:06 PM (IST)தூத்துக்குடியில் கனிமொழி எம்பி திறந்து வைத்த பஸ் ஸ்டாப்பிற்கு ரூ.1.54 கோடியா...?   என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பூங்காக்கள், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், 49 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், நடைபாதைகள், பொது கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்  புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து பேருந்து நிழற்குடை கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் நிழற்குடை ரூ 1 கோடியே 54 இலட்சத்தின் அமைக்கப்பட்டு உள்ளதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு நிழற்குடைக்கு ரூ 1 கோடியே 54 இலட்சமா என சமூக வலைத்தளங்களில் விவாதமானது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி இணை ஆணையர் சரவணன் கூறும்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டப்பட்டு உள்ள 8 நிழல் குடைகளும் அன்று திறக்கப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ 1 கோடியே 54 இலட்சம் எனவும் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக ரூ 1 கோடியே 54 இலட்சம் என்றால் ஏன் அந்த கல்வெட்டில் ரூ 1 கோடியே 54 இலட்சத்தில் அமைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது ஏன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory