» சினிமா » செய்திகள்
ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை' - நடிகர் சூர்யா உருக்கம்!
சனி 18, செப்டம்பர் 2021 3:42:17 PM (IST)
தேர்வு என்பது உயிரை விடப் பெரியது இல்லை, தற்கொலை எதற்கும் தீர்வல்ல என மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறி உள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது உரையை தொடங்குகிறார். மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு போன வாரம் அல்லது போன மாசம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போ இருக்கிறதா. யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும். இல்லாமல் கூட போயிருக்கும்.
ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா அம்மா இல்ல ஒரு பெரியவங்க, நண்பர்கள் ஆசிரியர்கள் யாரிடமாவது மனதை விட்டு பேசுங்கள்.
எல்லாவற்றையும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்தில் குறைய வேண்டிய விஷயங்கள். தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றும் முடிவு செய்வதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புபவர்களுக்கு, அப்பா அம்மா குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மறந்துவிடாதீர்கள்.
என் தம்பி தங்கைகளுக்கு…
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2021
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… pic.twitter.com/jFOK9qxqyN
நான் நிறைய தேர்வுகளில் பெயிலாகி இருக்கிறேன். குறைவான மார்க் வாங்கி இருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும். மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிந்து கொள்ளவும் நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம். நம்பிக்கையா.. தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் ஜெயிக்கலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… என்று கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

