» சினிமா » செய்திகள்

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை தகவல்

சனி 18, செப்டம்பர் 2021 3:50:13 PM (IST)

நடிகர் சோனுசோட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பாலிவுட்  நடிகர் சோனு சூட்  கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார்.பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் பாலிவுட் திரைப்படங்கள் மூலமாக சோனு சூட் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நீடித்த சோதனை குறித்து வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட அவரது இலாப நோக்கற்ற  தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது . மீதி ரூ.17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல சான்றுகள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது,

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் , சோனு சூட் தாராளமாக சமூக நல உதவிகளைச் செய்ய அவர் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கு சூனு சூட் நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்த ஆம் ஆத்மி அரசு அவரை பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆகவே சோனு சூட்டினை அரசியல் பின்னணியின் காரணமாக அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory