» சினிமா » செய்திகள்
மக்கள் இயக்கம் கூட்டங்கள் நடத்த தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் செப்.27ல் விசாரணை!
திங்கள் 20, செப்டம்பர் 2021 10:39:01 AM (IST)
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செய லாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, நடிகர் விஜய் தனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்தநிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் தரப்பில் வக்கீல் ஆஜராகினர். விஜய் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

