» சினிமா » செய்திகள்

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் : பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 12:48:48 PM (IST)



மத்திய அரசு பற்றி விஜய் விமரிசனமே செய்வதில்லை. விஜய் பயந்து போய் விட்டார் என சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ருத்ரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால், அந்தப் படத்துக்கு சென்சாரில் பிரச்னை வருவது இயல்பான ஒன்று தான். 

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமரிசனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். 

அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜய்யை என்ன செய்தார்களோ, அந்தப் படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமரிசனமே செய்வதில்லை. விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீஸ்வரர். பணம் அதிகம் சேர்ந்தவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory