» சினிமா » செய்திகள்
கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து வதந்தி: மக்கள் நீதி மய்யம் விளக்கம்
செவ்வாய் 30, நவம்பர் 2021 3:55:34 PM (IST)

கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்ததாவது, ''கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்தி : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
திங்கள் 5, ஜனவரி 2026 4:42:39 PM (IST)

ஜனநாயகன் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் : சிவகார்த்திகேயன் பேச்சு
திங்கள் 5, ஜனவரி 2026 4:21:40 PM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 11:20:46 AM (IST)

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

